• Fri. Jan 17th, 2025

திமுகா-விற்கே சூனியம் வைத்த அதிர்ப்தி திமுக கவுன்சிலர்கள்.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் திமுகா-விற்கே சூனியம் வைத்த
அதிர்ப்தி திமுக கவுன்சிலர்கள்.

கன்னியாகுமரியில் கடந்த புத்தாயிரம் ஆண்டானா 2000_மவது ஆண்டில் ஜனவரி 1_ம் நாள் கடல் நடுவே உள்ள வான் தொடும் அய்யன் திருவள்ளுவர் சிலையை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். முக்கடல் சங்கமத்தில் மூன்று நாட்கள் விழா நடைபெற்றது.

குமரி கடல் நடுவே தமிழக அரசு நிறுவிய சிலைக்கு கடந்த 23 ஆண்டுகளாக தமிழக அரசு சிலை நிறுவிய நாளை கொண்டாடுவது விட்டு விட்ட நிலையில், பத்மநாபன் என்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளர் தலைமையில் இயங்கிய தமிழ் அமைப்புடன், குமரியை சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து கடந்த 23_ ஆண்டுகளாக, கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவிய நாளில் சிறப்பு செய்தனர்.

குமரியில் உள்ள தமிழ் அமைப்பினர் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு( தி.மு.க., அதிமுக) திருவள்ளுவர் சிலை நிறுவிய தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டு கட்சியின் ஆட்சியின் போதும் கண்டு கொள்ளவே இல்லை.

கால ஓட்டத்தில் 25_ ஆண்டுகள் உருண்டோடின. இந்த காலகட்டங்களில் பல்வேறு (வெளிநாட்டு) தமிழ் மக்கள், இரண்டு பாறைகளுக்கு இடையே இருக்கும் கடல் பரப்பில் பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ஒலித்தது. இதற்கு அடிப்படை காரணம். ஆண்டில் 100_நாட்கள் கூட, திருவள்ளுவர் சிலை பாறைக்கு படகு போக்குவரத்து நடந்திருந்தால் அதுவே அந்த ஆண்டின் அதிசயம்.

கலைஞர் கருணாநிதி திறந்து வைத்த அய்யன் சிலையின் வெளி விழா கொண்டாடும் காலையில், கலைஞர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக இருந்து வெள்ளி விழாவில் பங்கேற்பதுடன், தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆன இரு பாறைகள் இடையே ஆன கண்ணாடி இழை பாலத்தை எதிர் வரும் (டிசம்பர்_30)நாள் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா வெகு பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி திமுக வின் அதிகாரத்தில் இருக்கும் நிலையில், இம்மாதம் பேரூராட்சி உறுப்பினர் கூட்டம் அதில் கன்னியாகுமரியே புதுப் பொலிவு பெற்று வரும் நிலையில், அது சம்பந்தமான தீர்மானங்கள் பேரூராட்சி கூட்டத்தில் விவாதிக்க இருக்கும் தினத்தில். மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்திற்கு 2_நிமிட மெளனம் அஞ்சலிக்கு பின் கூட்டம் தொடங்கியது.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மாதாந்திர கூட்ட பதிவேட்டில் அனைத்து உறுப்பினர்களில் பாஜக நீங்கலாக, காங்கிரஸ், அதிமுக, திமுக சார்பில் கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்களும் கையெழுத்து இட்டு கூட்டம் தொடங்கியதும், (திமுக துணைத்தலைவர்) உட்பட 7_திமுக உறுப்பினர்கள் தீர்மானங்கள் பற்றிய விவாதத்திற்கு முன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் ரமாதேவி சில உறுப்பினர்கள் மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என திமுக கவுன்சிலர் பூலோகராஜா தெரிவித்தார். இதற்கு செயல் அலுவலர் ரமாதேவி அனுமதிக்காத நிலையில், உறுப்பினர்களின் பேச்சுரிமை மறுக்கப்படும் சர்வாதிகார போக்கை கண்டித்து, வெளி நடப்பு செய்வதாக சொல்லி எழுந்து சென்றதும், அவரை தொடர்ந்து பூலோகராஜாவுக்கு ஆதரவாக திமுக துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், திமுக கவுன்சிலர்கள் இக்பால், ராயப்பன், சகாயசர்ஜினாள், பிரைட்டன் வினிதா, இந்திரா ஆகியோர் வெளியேறினார்கள்.

கூட்டரங்கத்தின் வெளியே 7_திமுக உறுப்பினர்களும் வாயில் கருப்பு துணி அணிவித்து வளாகத்தில் உள்ளே போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் நேரத்தில் அது சம்பந்தமான தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்ற இருக்கும் நிலையில் திமுக உறுப்பினர்களின் கோஷ்டி தனம் பட்டவர்த்தனமாக பொது மக்களின் மத்தியில் பரவியது.