
நேபாள சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் நேபாள சுற்றுலா தனியார்துறை அமைப்புகள் சார்பாக மதுரை தனியார் ஹோட்டலில் தென்னிந்திய சுற்றுலா வளர்ச்சி குறித்த தொழில் முறை கலந்துரையாடல் நடைபெற்றது.

நேபாள நாட்டின் முக்கிய சுற்றுலா நிறுவனங்களான ஏர்விங், முக்திநாத், ஆபுர்வா உள்ளிட்ட முக்கிய 9 வது சுற்றுலா
முகவர்கள் தென்னிந்திய சுற்றுலா முகவர்கள் அடங்கிய சோழன் சுற்றுலா நிறுவனம், லெமுரியா டிராவல்ஸ், நித்யா டூர்ஸ் டிராவல்ஸ், மதுரை டிராவல் கிளப் ‘உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன.

நேபாள சுற்றுலாத்துறை முதுநிலை மேலாளார்
ரோஹிணி பிரசாத் கானல் கூறும்போது.
நேபாள நாடும் இந்தியாவும் மத, மற்றும் கலாச்சார உறவுகள் கொண்ட நாடு.
பசுபதிநாதர் கோயில் ஜோதிர்லிங்க கோயில். லும்பினி
புத்தர் கோயில், முக்திநாத், ராமயண கோவில் மற்றும் உலகில் உயர்ந்த எவரஸ்ட் சிகரம், மானசரோவர் ஏரி, கைலாஸ் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளது.

தற்போது தென்னிந்திய மக்கள் நேபாளம் குறிந்து அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா மத மற்றும் கலாச்சார விழிப்புணர்வு குறித்து மதுரையில் சுற்றுலா முகவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகான ஏற்பாடு செய்யப்பட்டது என ரோஹிணி பிரசாத் கானல் கூறினார்.
சோழன் சுற்றுலா குழும மேலாளர் சக்தி கூறும் போது
நேபாள நாட்டை பற்றி நமக்கு சரிவர தெரியாது.
தற்போது நேபாள சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுற்றுலா விழிப்புணர்வு கருத்தரங்கம் மூலம் நேபாள சுற்றுலா முகவர்கள் . தென்னிந்திய சுற்றுலா முகவர்கள் கலந்துரையாடல் மூலம் தொழில்முறை நம்பகத்தன்மையும் புரிந்துணர்வும் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிருந்து அங்கு சுற்றுலா செல்ல பயணிகளை அனுப்பவும். நேபாளத்திலிருந்து தென்னிந்தியவரும் சுற்றுலா பயணிகளை வரவேற்க இது புதுமாதிரியான முயற்ச்சி என கூறினார்.

பேட்டி.
ரோஹிணி பிரசாத் கானல்
முதுநிலை மேலாளர்
சுற்றுலா வளர்சி கழகம்
நேபாளம்
சக்தி
சோழன் சுற்றுலா குழும மேலாளர்
