மதுரை மாவட்டம், மாரியம்மன் தெப்பக்குளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தலைமையில் பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பரு மழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தெரிவிக்கையில்:-

மதுரை மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை பங்கேற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறைகளுடன் இணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெய்த மழையின் போது இரண்டு அடிக்கு மேல் நீர் தேங்கிய நகர்ப்புற பகுதிகளில் 16 இடங்கள் கிராமப்புற பகுதிகளில் 11 இடங்கள் என 27 இடங்கள் பாதிக்கப்பட்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் பெரியார் அணை வைகை அணை சாத்தியார் அணை ஆகிய அணைகளின் உள்ள நீரின் அளவு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மழை காலங்களின் போது மழையின் அளவை கண்காணிக்க மதுரை மாவட்டத்தில் 22 ரெயின் கேஜ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது அது மட்டும் இல்லாமல் 38 தானியங்கி ரெயின் கேஜ் நிலையங்களும் இருக்கிறது மழை பெய்யும் போது எத்தனை கன அடி மழை பெய்துள்ளது என்ற தகவல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் தெரிவிக்கப்படும் அதற்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி மதுரை மாவட்ட அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அவசர காலங்களில் தொடர்பு கொள்ள அனைத்து அலுவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். தீயணைப்புத்துறை காவல்துறை சார்பில் 3473 ஆண்கள், 385 பெண்கள், 896 நீச்சல் தெரிந்த நபர்கள், 143 பாம்பு பிடிப்பவர்கள் மற்றும் மரம் வெட்டுபவர்கள் 623 என மொத்தம் 3858 முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் மேற்கொள்ள மதுரை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது வரும் மழைக்காலங்களில் கனமழை அறிவிப்பு வரும்போது பாதிக்கப்படக் கூடிய இடங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும் உணவு வழங்குவதற்கும் நகர்ப்புற பகுதிகளில் 78 கிராமப்புறப் பகுதிகளில் 47 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் தல்லாகுளம் சமயநல்லூர் சேடப்பட்டி மேலூர் திருமங்கலம் ஆகிய இடங்களில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடைகளுக்கான நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுமேலும் அவசர காலங்களில் விழும் நிலையில் உள்ள நிலையில் கட்டிடங்களில் இருப்பவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு நவீன உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கிறது. வரும் மழைக்காலத்தை பொறுத்தவரை மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் , காவல்துறை, தீயணைப்புத்துறை , செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.