• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இயக்குநர்கள் சங்க தேர்தல் பாக்யராஜ் -செல்வமணி அணிகள் நேரடி மோதல்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல், வாபஸ் என அனைத்தும் முடிவடைந்துள்ளது தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதன்படிஇந்தத் தேர்தலில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகிறது.


தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை(13.01.2022) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சங்கத்தின் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜூம், ஆர்.கே.செல்வமணியும் போட்டியிடுகின்றனர்.பொதுச் செயலாளர் பதவிக்கு இரா.பார்த்திபனும், ஆர்.வி. உதயகுமாரும் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபுவும், பேரரசுவும் போட்டியிடுகின்றனர்.


மேலும் துணைத் தலைவர்கள் பதவிக்கு பாக்யராஜ் அணியில் போட்டியிட்ட இயக்குநர் ஆர்.மாதேஷ், எஸ்.எழில் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு பாக்யராஜ் அணியில் ராஜா கார்த்திக், ஜெகதீசன்,விருமாண்டி, ஜெனிஃபர் ஜூலியட் ஆகியோரும், ஆர்.கே.செல்வமணி அணியில் சுந்தர்.சி., முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.


செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு பாக்யராஜின் அணியில் ஆர், பாண்டியராஜன், மங்கை அரிராஜன், வேல்முருகன், சசி, ஷிபி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, வி.பிரபாகர், பாலசேகரன், சாய் ரமணி, கே.பி.பி.நவீன், நாகேந்திரன், ஜெகன்.ஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


ஆர்.கே.செல்வமணி அணியில் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரமேஷ் கண்ணா, மனோஜ்குமார், மனோபாலா, சரண், திருமலை, ஏ.வெங்கடேஷ், ரவி மரியா, ஆர்.கண்ணன், முத்து வடுகு, நம்பி, ரமேஷ் பிரபாகர், கிளாரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இது தவிர இணைச் செயலாளர் பதவிக்கு சுயேச்சையாக இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் போட்டியிடுகிறார்.


வரும் ஜனவரி 24-ம் தேதி திங்கள்கிழமையன்று வடபழனியில் உள்ள திரை இசை கலைஞர்கள் சங்கத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.
வழக்கறிஞர் செந்தில்நாதன் இந்தத் தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக உள்ளார்.