• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கல்கியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வெளியிட்டார் இயக்குநர் மணிரத்னம்

Byதன பாலன்

Feb 15, 2023

பொன்னியின் செல்வன்’ நாவலைப் படைத்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை ‘கல்கி: பொன்னியின் செல்வர்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ்.சந்திரமவுலி எழுதியுள்ளார்.
கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை, இயக்குநர் மணிரத்னம் நேற்று வெளியிட்டார். முதல் பிரதிகளை கல்கி் பேத்திகளான சீதா ரவி, லட்சுமி நடராஜன் பெற்றுக் கொண்டனர்.அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவர் எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்று, 2ம் பாகம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது பொருத்தமானது என்று மணிரத்னம் குறிப்பிட்டார்.