• Sat. Oct 12th, 2024

பல்லடத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு குறை கேட்பு கூட்டம்

ByS.Navinsanjai

Feb 15, 2023

பல்லடம் தாலுக்கா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கலந்துரையாடல் மற்றும் பொது மக்கள் குறை கேட்பு கூட்டம் பல்லடம் நிர்வாக அலுவலகத்தில் நடந்தது .
நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் மணிக்குமார் தலைமை வகித்தார்,செயலாளர் தங்கராஜ்,துணைச்செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களிடம் விருது பெற்ற ஈரோடு சமூக ஆர்வலர் வள்ளி நாராயணன் மற்றும் தமிழ் நாடு தகவல் பெறும் உரிமை மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புரை ஆற்றினர் .கூட்டத்தில் கூறப்பட்ட புகார்கள்படி எரிவாயு நுகர்வோர்கள் சிலிண்டர் பில் தொகைக்கு மேல் ரூ. 50,100 என கேஸ் சப்ளையருக்கு இனாம் கொடுக்க வேண்டாம் மீறி கட்டாயப்படுத்தினால் நுகர்வோர் பாதுகப்பு துறைக்கு அல்லது நுகர்வோர் அமைப்புக்கு உடனே புகார் அளிக்க வேண்டும்.தயார்செய்யப்பட்ட உணவு வகைகளை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பதை யாரும் வாங்கி உண்ண வேண்டாம் அது குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல கேடு விளைவிக்கும். அதை தவிர்க்க வேண்டும்.உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் வாங்குவோர் அதன் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, விலையை பார்த்து வாங்க வேண்டும். வாங்கும் பொருளுக்கு உரிய ரசீது கேட்டு பெற வேண்டும் . ‘ நுகர்வோருக்கு பில்லே ஆயுதம்.


நுகர்வோர் தொழிலாளர்களின் உரிமைகள் மெல்ல மெல்ல பறி போய் கொண்டிருப்பதால் அனைவரும் ஆங்காங்கே உள்ள பொது நல அமைப்பு, சங்கங்கள், இயக்கங்களில் இணைந்து உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்படும் மக்களின் ஒவ்வாரு கோரிக்கை மனுவிலும் மக்களின் கண்ணீரும் வேதனையும் கலந்திருப்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் மக்கள் மனு மீது உரிய தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாமல் பொது மக்களின் மனுக்கள் தேங்கி அதன் மீதான நடவடிக்கை கால தாமதமாகிறது. கூடுதல் உதவியாளர்கள் ஊழியர்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.சரியான வேலை வாய்ப்பு இன்றி நுகர்வோர் வாங்கும் திறன் குறைந்து விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவதால் தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்குவதை ,கடன் பெறுவதை தவிர்த்து சிக்கனத்தை கடை பிடித்து எதிர்கால வாழ்வுக்கான சேமிப்பை உருவக்க அனைத்து தரப்பு மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்பது உள்ளிட்ட முடிவுகள் எட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் சுனிதா , பழனிச்சாமி. பிரகாஷ், செல்வகுமார், கண்ணன், செல்வராஜ், காமராஜர், அற்புதராஜ்வீரன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *