• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முத்துமலரை உதிர்த்துவிட்ட இயக்குநர் பாலா… 17 ஆண்டு மணவாழ்க்கை முறிவு

இயக்குநர் பாலா தனது மனைவி முத்துமலரை தற்போது விவாகரத்து செய்திருக்கிறார்.

சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா.
விக்ரமின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படம், தேசிய விருது, தமிழக அரசின் மாநில விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றது. சூர்யாவுடன் நந்தா, ஆர்யாவுடன் நான் கடவுள், விஷாலுடன் அவன் இவன், அதர்வாவுடன் பரதேசி என பாலாவின் படங்கள் அனைத்துமே அந்ததந்த நடிகர்களின் திரைவாழ்க்கையில் மிக முக்கிய படங்களான அமைந்தன.

இந்நிலையில் தற்போது இயக்குநர் பாலாவும் அவரது மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த அவர்கள், கடந்த சனிக்கிழமை (5.3.2022) சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்திருக்கிறார்கள்.

இயக்குநர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு பிரார்தனா என்ற பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை பாலா தற்போது விசித்திரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்.கே.சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.