• Fri. Jul 18th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

டிப்ளமோ சான்றிதழ்கள் வழங்கும் விழா..,

BySeenu

May 27, 2025

கோவையில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் நேச்சுரோபதி நிறுவனம் சார்பாக அக்குபஞ்சர், யோகா பயிற்சி மற்றும் கிளினிக் துறை சார்ந்த டிப்ளமோ நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் மையத்தின் நிறுவனர் கோமதி அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகம்மது ரபி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,தற்போது இந்த வகுப்புகளை நிறைவு செய்துள்ளவர்களில் பெரும்பான்மையாக பெண்கள் இருப்பதாக கூறிய அவர்,ஒரு தனி மனிதன் அல்லது ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு அதிகம் இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய, ஸ்ரீவாராஹி மந்த்ராலயம் அறக்கட்டளை மணிகண்ட சுவாமிகள்,பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வு கண்டுள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், சமுதாய நல்லிணக்க பேரவை தலைவர் வழக்கறிஞர் திருலோகசந்தர்,ஆத்மா அறக்கட்டளை செயலாளர் பாலசுப்ரமணியம்,திருச்சி சாலை சி.எஸ்.ஐ.ஆலய தலைவர் ராஜேந்திரகுமார்,பேராசிரியர்கள் ரகுபதி,ப்ரீத்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.