நான்கு வழிச்சாலையாகிறது திண்டுக்கல் – குமுளி இருவழிச்சாலை. அதற்கான ஆரம்ப கட்ட அடிப்படைப் பணிகளை துவக்கி உள்ளது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை. இதனால், திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு, பெரியகுளம் , தேனி , சின்னமனூர் , உத்தமபாளையம் , கம்பம் , கூடலூர் , குமுளி வரை செல்லக்கூடிய இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.