• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் திமுக வேட்பாளர் தேநீர் கடையில் வாக்கு சேகரிப்பு..,

ByS.Ariyanayagam

Apr 9, 2026

திண்டுக்கல் திமுக வேட்பாளர் தேநீர் கடையில் வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு, அனுமந்த நகர், ராமர் காலனி உட்பட பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் ஒரு நல்லாட்சி வேண்டுமென்றால் திமுக கூட்டணிக்கு நீங்கள் ஓட்டு அளிக்க வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். கல்வி மற்றும் தொழிலில் தமிழகம் முன்னேற திமுகவுக்கு தான் வாக்களிக்க வேண்டும்.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பல நல்ல திட்டங்களை திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டுமல்ல தமிழகத்துக்கு செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.