திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கடந்த சில மாதங்களாக அடி வயிற்றில் வலியுடன் சிரமப்பட்டார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிறுநீரகத்தில் கல் இருப்பது உறுதியானது இதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஸ்ரீசரவணன் தலைமையில் மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை டாக்டர்கள் ஆகியோர் ஆட்சியர் சரவணனுக்கு அறுவை சிகிச்சை செய்து சிறுநீரக கல்லை அகற்றினர். ஆட்சியர் சரவணன் வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்
மாவட்ட ஆட்சியர் சரவணன் தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அனைவருக்கும் இது சிறந்த முன்னுதாரணம் என்று பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



