மாமதுரையர் – டிஜிட்டல் மார்க்கெட்டிங் விழா மாமதுரையர் இயக்கத்தின் சார்பில் மதுரை ஜான்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற “டிஜிட்டல் மார்க்கெட்டிங் விழா” வெற்றிகரமாக நடைபெற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.அரங்கம் நிரம்பி வழிந்து, உறுப்பினர்கள் மிகுந்த அளவில் கலந்து கொண்டனர் குறிப்பாக மகளிர் அதிக அளவு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.பலர் நின்று கேட்ட நிலையும் ஏற்பட்டது.

முனைவர் க.திருமுருகன் அகில உலகத் தலைவர் தலைமை தாங்கி மாமதுரையர் அங்காடி, பூங்காக்களே பராமரிப்பு செய்து அதில் அங்காடிகளை ஏற்படுத்துவது, மகளிர் மன்ற செயல்பாடுகள் தொழில் வளர்ச்சிக்கான ஏற்பாடுகள் தொழில் ஏற்றுமதிக்கான உருவாக்குவது, மாமதுரையை குப்பையில்லா நகரமாக மாற்றுவது பற்றி பேசினார்.சம்பத் குமார் பொதுச்செயலாளர் வரவேற்பு ஆற்றினார்.அதை தொடர்ந்து ஜே. கே. மூத்து , டிஜிட்டல் ஆல் மற்றும் பி கிரோ தலைவர், அருணாசலம் நாகராஜன் CEO, BuizLab,டிஜிட்டல் பயன்பாட்டை பற்றி எடுத்துரைத்தினர் வணிக நல வாரியத்தைப் பற்றி வணிகவரித்துறை சார்ந்த செல்வராஜ், மற்றும் குணாலன் ஆகியோர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு வணிக நல வாரியத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.
விஜயராகவன்,தேவிபாலா, ரத்தினமாலா, ஜெகதாம்பாள், முத்துகருப்பசாமி மற்றும் மோகன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். இணைச்செயலாளர்கள், வேணுகோபால், கார்த்திகேயன் சுவாமிநாதன்,மகளிர் மன்ற தலைவிகள் சரோஜினி, அனவர்த்தனசெல்வி, புஷ்பலதா, சரண்யா ஆகியோர் தலைமையில் பல்வேறு மகளிர் குழுக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை அலங்கரித்தனர். இந்த விழாவில் வணிக வளர்ச்சிக்கான பரந்த வாய்ப்புகள் பற்றிய விளக்கங்கள்,புதிய தொழில்நுட்பங்களின் டிஜிட்டல் பிளாட்ஃபாம்கள், மார்க்கெட்டிங் டிப்ஸ் ஆகியவை இதில் இடம்பெற்றன. இறுதியாக இணைச் செயலாளர்கள் நன்றியை தெரிவித்தனர்.