• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

ஜம்புநாதபுரம் காவல் உதவி ஆய்வாளருக்கு டிஐஜி பாராட்டு..!

ByJawahar

Jan 26, 2023

முசிறி அருகே மனைவியை கொன்ற வழக்கில் விரைந்து செயல்பட்டு கணவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் வகையில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளரை டிஐஜி சரவணன் சுந்தர் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.
தா.பேட்டை அருகே உள்ள துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் ரமேஷ். இவரது மனைவி கோமதி. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ரமேஷ் மனைவி கோமதியை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து குற்றவாளி ரமேஷை கைது செய்து விசாரணை செய்து தடயங்களை கைப்பற்றி வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விசாரணை முடிவில் மனைவியை கொன்ற ரமேசுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க ஜம்புநாதபுரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜதுரை விரைந்து பணியாற்றினார். இதையடுத்து முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் பரிந்துரையின் பேரில் போலீஸ் டிஐஜி சரவணசுந்தர் உதவி ஆய்வாளர் ராஜதுரையை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இச்சம்பவம் சக காவலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.