திருப்பரங்குன்றம், ஜன,27-அதிகாரத்தில் பகிர்வுவிஷயத்தில் காங்கிரஸ் எம்.பி.யானமாணிக்கம் தாகூருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.வான தளபதிக்கும் இடையேகருத்து வேறுபாடு அதிகாரப்பதிவு விஷயத்தில் காங்கிரஸ் எம்பி நடுக்கம்தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஒரு சிலமாதத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில்கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரத்தில் பகிர்வு வேண்டும் என்றுகாங்கிரஸ் கட்சியின்விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். அது தி.மு.க. மட்டுமல்லாது அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில்ஆட்சிஅதிகாரத்தில் பங்கு என்பது தொடர்பாக வெளியே பேசக்கூடாது என்று காங்கிரசாருக்கு கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த 24-ந்தேதி அன்றுதிருநகர் மீனாட்சி தெருவில் உள்ள விருதுநகர் தொகுதி கட்சி அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி நிருபர்களுக்குபேட்டி அளித்த போது ஆட்சி அதிகார பகிர்வு தொடர்பாக பேசக்கூடாது என கட்சியின் மேலிடம் கூறிய நிலையில்அது தொடர்பாக பேசுவது நாகரிகமாகாது. என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 25-ந் தேதிமதுரைசுப்பிரமணியபுரத்த மமதுரை மாநகர் மாவட்டம் தி.மு.க. சார்பில் நடைபெற்ற வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ.தளபதி பேசும்போது தி.மு.க.இல்லைன்னா இந்தியா கூட்டணியே இல்லை.
காங்கிரசுக்கு சீட்டு கொடுக்க கூடாது.ஒரு தொகுதியில் 3 ஆயிரம் ஓட்டு தான்இருக்கிறது.வார்டுகளில் பூத்து கமிட்டி போட ஆள் இல்லை. ஆனானஅதுல பங்கு வேணும் இதுல பங்கு வேண்டும் என்றுசொல்றாங்க. இதை தி.மு.க, தலைமை புரிஞ்சுக்கிட்டு காங்கிரஸுக்கு சீட்டுகொடுக்கக் கூடாது கொடுத்தாலும் நம்ம ஆளுக அதற்கான வேலையை பார்த்துடனும் . ஆட்சிஅதிகாரத்தில் பகிர்வு வேண்டும் என்றுபேசுவதுநம் மனதுக்கு மிகவும்வேதனையாக உள்ளது. என்று பேசியுள்ளார்..

இந்த நிலையில் நேற்று மாணிக்கம் தாகூர் எம் பி .தனது எக்ஸ்தலத்தில்
தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டதுமதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்நிற்க வேண்டும் என்று அன்பு தலைவர் கார்க்கேயிடம் கோரிக்கை வைப்பேன் என்று பதிவு செய்துள்ளார். பொதுக்கூட்ட மேடையில்தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியதும் அதற்குபதில் அளிக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் எம்.பி.தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து இருப்பதும் சட்டசபை பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணியில் உள்ள தி.மு.க., காங்கிரஸ்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.






