• Tue. Apr 23rd, 2024

ரஜினியின் இடத்தை பிடித்தாரா விஜய்? -கே.ராஜன்

நடிகர் விஜய் ரஜினியின் இடத்தை பிடித்துள்ளார் என கே.ராஜன் கூறியுள்ளார்.
விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். இப்படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்வதாக படக்குழு முடிவெடுத்துள்ளது. விஜய், பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு அடுத்த படத்தில் வம்சி பைடிபல்லியுடன் இணைய உள்ளார்.

கொரோனா தாக்கத்திற்கு பிறகு வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வசூலை தந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில்,  ரஜினியை நடிகர் விஜய் பின்னுக்கு தள்ளி விட்டதாக கூறி இருக்கின்றார். அப்போது சிவாஜி, பிறகு ரஜினி, தற்போது விஜய் அந்த இடத்தை பிடித்துள்ளதாக கூறியிருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *