• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடிகைகளை குதிரை என்று கூறினாரா விஜய்..?

ByA.Tamilselvan

Dec 11, 2022

வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் ஷாமின் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இதற்கான பணிகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது. வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 24ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஷாம் அண்மையில் அளித்துள்ள பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனலுக்கு ஷியாம் அளித்த பேட்டியில் குஷி படப்பிடிப்பில் அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான் என்று சொல்கிறார்கள் என விஜய்யிடம் கேட்டேன்.


அதற்கு அவர் மேலே கை காட்டி எல்லாம் இறைவன் செயல் என்றார். பிறகு திடீரென்று ஒரு நாள் ஹீரோவாகி ’12பி’ படத்தில் நாயகனாக அறிமுகமானது குறித்து தெரிவிக்க அண்ணனை சந்தித்தேன். அப்போது அவர் என்னடா வரும் போதே சிம்ரன், ஜோதிகானு இரண்டு குதிரையோட வர யாருடா நீ என கேட்டார் என்று கூறி உள்ளார். இவ்வாறு நடிகைகளை குதிரையுடன் விஜய் ஒப்பிட்டு பேசியதாக கூறப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.