• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பத்திரிகையாளரை திட்டினாரா பைடன்?

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், திங்கள் கிழமை அன்று அதிபர் ஜோ பைடனின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பத்திரிகையாளர் சந்திப்பு முடியும் நேரத்தில் அறையை விட்டு வெளியேறுகையில் அதிபர் ஜோ பைடனிடம், அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் பத்திரிகையாளர் ஒருவர், `பணவீக்கம் என்பது அரசியல் பொறுப்பா?’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு “இது மிகப்பெரிய சொத்து, அதிக பணவீக்கம்” என்று பதிலளித்தார் ஜோ பைடன். மேலும், கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை மோசமான வார்த்தைகளில் முணுமுணுப்பது போன்று திட்டியுள்ளார். இந்த நிகழ்வு அருகில் படம் பிடித்துக் கொண்டிருந்த நிருபரின் வீடியோ கேமிராவிலும் பதிவாகியுள்ளது.

பத்திரிகையாளரை ஜோ பைடன் திட்டிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. ஜோ பைடனின் இந்த செயல் மக்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பைக் குறைக்கும் விதமாக மாறியுள்ளது.

இதனிடையே அதிபர் ஜோ பைடன் தரப்பினர், முறையான தரவுகள் இல்லாமல் கேள்வி கேட்டதால், கேள்வியை தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார் என தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நடந்த ஒரு மணிநேரத்துக்குள்ளாக, அதிபர் அந்த நிருபரை அழைத்து `தனிப்பட்ட முறையில் உங்களை குறிப்பிட்டு பேசவில்லை’ என்று பேசியதாகவும் கூறப்படுகிறது.