• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

தன்னுடைய நகையை மீட்ட காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த வைர நகை உரிமையாளர்.,

ByS. SRIDHAR

Feb 15, 2026

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாநகரம் திருக்கோகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருஞ்சுனை அருகே ஆண்டிப்பட்டி பிரிவு ரோடு அருகே உள்ள பெரிய இழத்தான் குளம் அருகே கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகர் பகுதியில் சேர்ந்த லோகநாதன் வயது 49 என்பவர் தன்னுடைய வைர நகைகளை காரைக்குடியில் உள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாததால் மீண்டும் வைர நகைகளை எடுத்துக் கொண்டு காரில் திரும்பியுள்ளார்.

அப்பொழுது மேற்கண்ட இடத்தில் Toyota Etios என்ற காரில் வந்த ஏழு நபர்கள் வாகனத்தை நகை வியாபாரி சென்ற Swift கார் மீது மோதி காரை நிறுத்தி உள்ளனர் மேலும் காரில் வந்த 7 நபர்கள் நகை வியாபாரியிடம் இருந்த 48 வைரம் பதித்த 25 கிராம் நெக்லஸ் 3 கேரட் பதிக்கப்பட்ட 3 கிராம் தங்க கடுக்கன் 1.5 கேரட் வைரம் பதிக்கப்பட்ட 3 கிராம் தங்க மோதிரம் என 30 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி சென்றனர் இது குறித்து லோகநாதன் கொடுத்த புகாரியின் அடிப்படையில் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா DSP பிருந்தா திருக்கோகர்ணம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட தனிப்படை காவல்துறையினரை அமைத்து குற்றவாளிகளை உத்தரவிட்டார் இந்நிலையில் தனிப்படையினர் சிவகங்கை மாவட்டம் ராமநாதபுரம் மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தேடப்பட்டு வந்த நிலையில் 7 எதிரிகளின் 3 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து மேற்படி நகைகள் மீட்கப்பட்டன சந்தை மதிப்பின் நகைகளின் மதிப்பு 70 லட்சம் என கூறப்படும் நிலையில் மீட்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். புதுக்கோட்டை SP அபிஷேக் குப்தா திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட SP அபிஷேக் குப்தா சம்பந்தப்பட்ட நபர்களை 48 மணி நேரத்திற்குள் பிடித்து நகைகளை மீட்ட தனிப்படை காவல்துறையினரின் பணியை பாராட்டுவதாகவும் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சமீப காலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவது காவல்துறையினருக்கு பெருமை ஏற்படுத்தும் சம்பவமாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் விசாரணைக்காக கூடுதல் தகவல்களை கூற முடியாது எனவும் மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட பிறகு விரிவான விவரங்களை கூறுவதாகவும் SP அபிஷேக் குப்தா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைர நகைகளின் உரிமையாளர் லோகநாதன் சம்பவம் நடைபெற்ற 48 மணி நேரத்தில் காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய நகையை மீட்டமைக்கு காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.