கோவையில் நடைபெற்ற சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கோவை கதிர்நாயக்கன்பாளையத்தில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை கதிர்நாயக்கன்பாளையம் வார்டு உறுப்பினர் ராஜாமணி தொடங்கி வைத்தார் . பி.பி.ஜி கல்வியியல் கல்லுாரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா டயாபடிக் கேர் மற்றும் குருடம்பாளையம் ஊராட்சி இணைந்து முகாமை நடத்தினர்.
இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா டயாபடிக் கேர் மருத்துவமனையின் தலைவர் பிரசன்னா சர்க்கரை நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விவரித்தார்.
உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவை நான்கு துாண்களாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். இந்த முகாமிற்கு வருகை தந்த 150 பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ அறிவுரைகளும், மருந்துகளும் மருத்துவரால் வழங்கப்பட்டது. இதில் பி.பி.ஜி ஆப்டொமெட்ரி மாணவர்கள் கண்பரிசோதனை செய்தனர். இதில் பி.பி.ஜி கல்வியியல் கல்லுாரி ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.