• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டாப் ஹீரோவுடன் நடிக்க மறுத்த தனுஷ்!

முன்னதாக, நடிகர் தனுஷ், தளபதி விஜய்யுடன் மறுத்தது குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய், தனுஷ் இருவருமே சோதனைகளை சாதனையாக மாற்றியவர்கள். நாளைய தீர்ப்பு வெளியானதும் நடிகர் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவரது கடின உழைப்பின் காரணமாக, விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில், வெளியான பூவே உனக்காக படம் வெற்றி படமாக அமைந்தது. இன்று இந்திய சினிமாவில் டாப் ஹீரோ லிஸ்டில் உள்ளார்!

அதேபோல் நடிகர் தனுஷும் தான் நடித்த முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக கடும் விமர்சனங்களை சந்தித்தார். அதை பொருட்படுத்தாது வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு முன்னேறியதால் இன்று கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் உலகில் கலக்கி வருகிறார்!

இந்நிலையில் விஜய்யுடன் நடிகர் தனுஷ் இணைந்து நடிக்கும் வாய்ப்பை தனுஷ் வேண்டாம் என கூறியது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் விஜய் ஆக்க்ஷன் ஹீரோவாக களமிறங்கினார். அந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடித்திருந்தார். ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் தனுஷை தான் நடிக்க கேட்டார்களாம். ஆனால் தனுஷ் தான் தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டேன், அதனால் தம்பி கதாபாத்திரத்தில் நடித்தால் சரிபட்டுவராது என கூறிவிட்டாராம்.

பல ஆண்டுக்குகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் தற்போது வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.