• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடந்தே சென்ற பக்தர்கள்..!

Byவிஷா

Oct 10, 2023

திருப்பதி ஏழுமலையான தரிசிக்கை புதுச்சேரியில் இருந்து பக்தர்கள் நடந்தே சென்று தரிசனம் செய்திருக்கின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ஆம் தேதியன்று மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது போல, புரட்டாசி மாதத்தில் புதுச்சேரியில் இருந்து பெருமாள் பக்தர்கள் விரதம் இருந்து திருப்பதிக்கு நடைபயணமாக சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. புரட்டாசி 1ம் தேதி அன்று ஏராளமான பக்தர்கள் மாலை அணைந்து விரதம் இருந்தனர். பக்தர்கள் திருமலைக்கு செல்ல நினைப்பதும் செல்வதும் பாக்கியம் அங்கு சென்று சீனிவாசனை சேவிப்பது பெரும் பாக்கியம் திருமலைக்கு நடந்து சென்று தரிசனம் செய்தால் அதைவிட பாக்கியம் வேறு ஒன்றும் இல்லை என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
அதன்படி அவர்கள் கடந்த 3 சனிக்கிழமை விரதம் இருந்த நிலையில், பின்னர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே ஒன்று கூடினர். தொடர்ந்து சுமார் ஆயிரக்கணக்கான பெருமாள் பக்தர்கள் திருப்பதி திருமலைக்கு பாதையாத்திரை மேற்கொண்டனர். அப்போது அனைவரும் பெருமாள் பாடல்களை பாடியவாறு சென்றனர்.