• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

விடுமுறை தினத்தையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படைவீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்லும் பெண்கள், அறுபடை முருகன் கோவில்களுக்கு மாலையிட்டுள்ள பக்தர்கள் ஏராளமானோர் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால், பொதுவழியில் பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளில், ஒன்றரை மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை வழிப்பட்டனர்.