• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்

Byadmin

Jan 31, 2022

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். ராமேஸ்வரத்திற்கு ஆண்டு தோறும் முக்கிய அமாவாசை நாட்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா எதிரொலி காரணமாக முக்கிய அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூடுவதற்கு அரசு தடை விதித்தது.

இந்தாண்டு இம்மாத தை அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முக்கியமான அமாவாசையாகும். தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகாளல் ராமேஸ்வரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பில் கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து தயார் செய்து வைத்தனர்.
ஆனால் இன்று காலையில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படவில்லை. காரணம் அமாவாசை இன்று ஜன.31 பகல் 2 மணிக்கு மேல் துவங்குவதால் எதிர்பார்த்த அளவிற்கு பக்தர்கள் என புரோகிதர்கள் தெரிவித்தனர்.

பாம்பன் பாலம் முதல் அக்னி தீர்த்த கடற்கரை வரை சாலையில் காவல்துறையினர் அதிகளவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் வாகனங்கள் எவ்வித தடங்களும் இன்றி சென்றன. தை அமாவாசை நாளை பிப்.1 பகல் 12 மணி வரை இருப்பதால் பக்தர்கள் வருகை இனி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.