கரூரில் விடாமல் பெய்த தொடர் மழை காரணமாக, கரூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பசுபதீஸ்வரர் கோவிலில் மழை நீர் புகுந்ததால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கரூர் மாநகரப் பகுதியில் விடாமல் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக கோயில் வளாகத்தை சுற்றியுள்ள தேர் வீதி பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீர் திடீரென கோயிலுக்குள் புகுந்ததால் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் சென்ற பக்தர்கள் மழை நீரினால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், கோயிலுக்குள் பக்தர்கள் வர வேண்டாம் என கோயில் நிர்வாக அதிகாரி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் புகுந்த மழைநீரால் பக்தர்கள் அவதி








