• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்..,

ByKalamegam Viswanathan

Sep 19, 2026

மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி வழிபட்டு சென்றனர். கோவில் நிர்வாகம் சார்பாக முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்கள் வரிசையாக செல்வதற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டும்

காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் மற்றும் சேவா நிறுவனத்தினர் இணைந்து பக்தர்களை வழி நடத்தி அமைதியான முறையில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு முறையான ஏற்பாடுகள் செய்திருந்தனர். கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கம் அப்பகுதி முழுவதும் ஓங்கி ஒலித்தது.