• Wed. Nov 30th, 2022

பதவிகளை திமுக தலைமை வழங்குமா.? தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியிலே ஆவல்..

Byகாயத்ரி

Sep 24, 2022

திராவிட முன்னேற்ற கழகத்தில் தேவேந்திரர்களுக்கு துணை பொதுச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை வழங்க திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறார் சிறுபான்மை பிரிவு செயலாளர், இஸ்லாமிய முன்னேற்ற கழகம், மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட நுகர்வோர் அமைப்பு தலைவர் ராஜா முகமது.

தேவேந்திரர் சமூக மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவிற்கு வாக்களித்து வருகின்றனர்.! “தேவேந்திரர்கள் அளித்த வாக்குகளால் தான் திமுக 2006 ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது” என்று இந்து நாளேடு அன்றைய காலகட்டத்தில் தலையங்க செய்தி வெளியிட்டிருந்தது. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமி, அந்தியூர் செல்வராஜ் போன்றவர்களுக்கும், பறையர் சமூகத்தை சேர்ந்த பரிதி இளம்வழுதி, ஆ.ராசா போன்றவர்களுக்கும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளை திமுக தலைமை வழங்கி இருக்கிறது.தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி இதுவரை வழங்கப்படவில்லை.

“21 மேயர் பதவிகளில் தேவேந்திரர்களுக்கு ஒரு மேயர் பதவி கூட வழங்கப்படவில்லை” என்ற ஆதங்கம் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் அமைச்சர் சங்கரன்கோவில் தங்கவேலு,தனுஷ் குமார் மானாமதுரை தமிழரசி பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி அவர்களின் தந்தையார் 45 ஆண்டுகளாக திராவிட முன்னேற்ற கழகத்தில் விருதுநகர் மாவட்டம் வத்ரா தாலுகா அயன் கரிசல்குளம் கிராமம் கிளைக் கழக செயலளராக பணிபுரிந்து வருகிறார். அவர் கட்சிக்காக பல சிறை நிரப்பும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். அவருடைய மகன் திராவிட முன்னேற்றக் கழகம் சிந்தனை உள்ளவர் திராவிட கழகத்தில் 22 ஆண்டு காலமாக உறுப்பினராக இருந்து வருகிறார். அதுபோக தினந்தோறும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை பற்றியும் பத்திரிகை நாளிதழ்களில் எழுதி வருகிறார், துடிப்பான தேவேந்திரகுல வேளாளர்களின் இளைஞர் சமுதாயத்தின் மத்தியில் பிரபலமானவர், தமிழகத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் அனைவருக்கும் இவருடைய முகம் நன்கு அறியப்படுபவர். செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் வருகையே முதல் பக்க விளம்பரமாக இரண்டு நாளேடுகளில் செய்தி வெளியிட்டார்.

பரமக்குடியில் அனைத்து அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு சிறப்புபாக வழங்கப்பட்டன அதுபோக திமுக முப்பெரும் விழா 2022 விருதுகள் செப்டம்பர் 15ஆம் தேதி வியாழக்கிழமை விருதுநகரில் நடைபெற்றது. இதில் திராவிட மாடலின் முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகையை அறிந்து முதல் பக்கத்தில் நமது தினம் ஜெயம் நாளிதழ் மற்றும் தின காற்று நாளிதழ் இரண்டு செய்தி தாள்களிலும் 3000 பிரதிகள் அச்சிடப்பட்டு சிறப்பு மலர்களாக முப்பெரும் விழா நடைபெற்ற அரங்கத்திற்குள் அனைத்து அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மாவட்ட கழக உறுப்பினர்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும், நமது திராவிட கழகத்தின் சிறப்பை வெளியிடும் வகையில் இந்த செய்தி இருந்தது. இந்த விளம்பரத்தை கொடுத்தவரும் பேராசிரியர் முனைவர் அழகுராஜா பழனிச்சாமி ஆவார் கழகத்தின் மீது மிகவும் பற்று கொண்டவர் சிறுவயதிலிருந்தே மு.க. ஸ்டாலின் மீது கொண்ட ஈர்ப்பினால் இயக்கப்பட்டவர் தற்போது தமிழகத்தின் விடிவெள்ளியாக இருந்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் அன்பு தம்பியாக திமுகவில் சமூகம் சார்ந்த திராவிட முன்னேற்றம் சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்ந்து செய்திகளை எழுதி வருகிறார். நன்கு படித்த பேராசிரியராகவும் துடிப்பான இளைஞராகவும் இருக்கும் இவரும், இவரைப் போன்ற எண்ணற்ற தேவேந்திரர் சமூக நிர்வாகிகள் கட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் யாருக்காவது துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பெருமைபடுத்த வேண்டும்.

திமுக தலைவர் அவர்கள் 2019 ஆம் ஆண்டு தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். இந்த ஆண்டு திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். இதனால் உதயநிதி ஸ்டாலின் மீது தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் மத்தியில் தனி மரியாதை உருவாகி இருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் தேவேந்திரர்களின் ஆதரவால் பல சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் மட்டுமே பயணித்து வரக்கூடிய, திமுகவை கண்மூடித்தனமாக ஆதரித்து வரக்கூடிய தேவேந்திரர்களின் வாக்குகளை தக்க வைக்கும் வகையிலும், பெரும்பான்மையாக வாழ்கின்ற மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திருப்திப்படுத்தும் வகையிலும், தேவேந்திர்களுக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவியையும், கூடுதலாக மாவட்ட செயலாளர் பதவிகளையும் திமுக தலைமை வழங்குமா.? அல்லது வழக்கம் போல புறக்கணிக்குமா.? என்ற கேள்வி தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது, இதற்கு திமுக தலைமை பதிலை தரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தேவேந்திர குல மக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *