• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படர்தாமரை உடலுக்கு நாசம்- ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம்- பாஜக தாமரை தேசத்திற்கு நாசம்-நடிகர் கருணாஸ் பரப்புரை

ByG.Ranjan

Apr 10, 2024

சிவகாசியில் நடிகர் கருணாஸ் இபிஎஸ் நம்பிக்கை துரோகி என சொன்னபோது, நீங்கள் ஏன் அவருக்கு ஒட்டு போட்டீர்கள் என ஒருவர் கேள்வி எழுப்பியதால் சர்ச்சை
அன்று சின்னமா ஒட்டு போட சொன்னதால் ஒட்டு போட்டேன் என பதில் அளித்து கூட்டத்தில் சமாளித்த நிகழ்வு சர்சையை ஏற்படுத்தியது. இந்தியாவின் கடன் கடந்த 10 ஆண்டுகளில் 50 லட்சம் கோடியிலிருந்து ஒன்றரை லட்சம் கோடி என தவறாக சொன்ன கருணாஸ்

சிவகாசி அருகே திருத்தங்கலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவு கேட்டு நடிகர் கருணாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய கருணாஸ்..,

சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை கேள்விக்குறியாகிவிட்டார் பிஜேபி ஓனர் நரேந்திர மோடி. இந்தத் தேர்தல் ஒரு 2-வது சுதந்திர போராட்டத்திற்கான தேர்தல், தமிழக மக்களையும், தமிழர்களையும் கேவலப்படுத்தி மதிக்காதவர் பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்வது என்பதையே பிரதானமான ஆயுதமாக கொண்டுள்ளது பாஜக. பல்வேறு குற்ற பின்னணிகளில் உள்ளவர்களை பாஜக கட்சியில் சேர்க்கின்றனர்.

இதுதான் மக்களுக்கான கட்சியா? மத்திய அரசை எதிர்த்தவர்களின் நிலைமை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிலைமைதான். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், சிபிஐ, வருமானவரி துறை போன்ற துறைகளின் மூலமாக மத்திய அரசு மிரட்டி வருகிறது.

ஒன்று கட்சியை அபகரிப்பது அல்லது இரண்டாக உடைப்பதையே மத்திய அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து நமது எதிர்கால தலை முறையை வாழ விடாமல் செய்து, ஒன்றிய பாஜக ஆட்சியில் ஐநா சபையில் இந்தியா பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

நம்மை ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மோடி வகையறாவான கேடி வகையறா பிரிக்கின்றனர். மக்களிடமிருந்து வரிப் பணத்தைப் பெற்று தனியாருக்கு கடனாக கொடுத்து அதனை வசூல் செய்யாமல் தள்ளுபடி செய்யும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது.

சாமிக்காக அரசியல் நடத்துவது பாஜக- பூமிக்காக அரசியல் நடத்தி வருபவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியது தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. மண்ணின் மானம் காக்க இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் நிதி மாநில அரசுக்கு ஒதுக்கி வழங்கப்படாமல் மறுக்கப்படுகிறது.

60 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் கடன் 50 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 10 ஆண்டில் அது ஒன்றரை லட்சம் கோடியாக உள்ளது என தவறாக பேசினார்.

இபிஎஸ் நம்பிக்கை துரோகி என சொன்னபோது நீங்கள் ஏன் அவருக்கு ஒட்டு போட்டீர்கள் என ஒருவர் கேள்வி கேட்க, அன்று சின்னமா ஒட்டு போட சொன்னதால் ஒட்டு போட்டேன் என மலுப்பலாக பதில் அளித்தார்.

மத்திய அரசின் நீட், குடியுரிமை போன்ற சட்டங்களை ஒத்துக் கொண்ட நம்பிக்கை துரோகி எடப்பாடி பழனிச்சாமி. சசிகலாவுக்கு துரோகம் செய்தவர்கள் தான் எடப்பாடி பழனிச்சாமி, தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்ம். முக்குலத்தோரின் முதல் எதிரி பாஜக தான். பாஜகவுக்கு யாரும் ஒற்றுமையுடன் இருக்கக் கூடாது.

இந்த மண்ணுக்கு துரோகம் செய்பவன் தமிழகத்தை அழிக்க நினைப்பவன் சர்வ நாசம் ஆயிடுவான்.

படர்தாமரை உடலுக்கு நாசம்- ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம்- பாஜக தாமரை தேசத்திற்கு நாசம். நமக்கு நாமே பாதுகாக்க வேண்டிய தேர்தல் தான் இது. ஒன்றிய அரசு பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்களை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஒட்டுமொத்த சமத்துவ தேசத்தை, அரசியலமைப்புச் சட்டத்தை பாஜக குழி தோண்டி புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதற்கெல்லாம் ஒரே ஆயுதம் மக்களின் கையில் உள்ள வாக்கு.

தமிழகத்தின் சமூக நீதியை பாதுகாக்க, இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க இந்திய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். என்றார்.