தெலுங்கான மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற மதுரை மாணவிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

15 மாநிலங்கள் கலந்து கொண்ட தேசிய ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தமிழகத்தின் சார்பில் 30 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மூன்று தங்கம், ஆறு வெள்ளி பதக்கம் வென்று சாதனைகள் படைத்தனர்.
மதுரையில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையத்தில் பதக்கம் என்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர் வெங்கடேஷ் கூறுகையில்:

டிசம்பர் ஐந்து முதல் 15ஆம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் தேசிய அளவில் நடைபெற்றது. இதில் மதுரையிலிருந்து 35 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் நாலு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளோம். இந்த நிலையில் இன்று துணை முதல்வரை சந்தித்தோம் அவர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
இதில் வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு உள்ளது. விளையாட்டு கோட்டாவின் மூலம் இவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பதற்கான வசதிகளும் உள்ளது. துணை முதல்வர் விளையாட்டுத்துறையில் கொண்டு வந்த சலுகைகளில் நிறைய வசதிகள் கிடைத்துள்ளது. இதனால் அதிக வீரர்கள் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகின்றனர்.
இந்த விளையாட்டு பயிற்சி பெறுவதற்கு செலவு கொஞ்சம் அதிகமாக ஆகும் அதனால் அதற்கான கட்டமைப்புகள் தனியாரிடம் மட்டுமே உள்ளது. தமிழக அரசு மூலமாக கட்டமைப்பு கிடைத்தால் இன்னும் நிறைய வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறினார்.

தொடர்ந்து வெள்ளி வெற்றி பெற்ற வீராங்கனை சங்கமித்ரா கூறுகையில்:
நான் இதில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளேன் அடுத்த கட்டமாக ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பது என் லட்சியம்.




