• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

துணை கலெக்டர், டி.எஸ்.பி. பதவிகளுக்கான தேர்வு நாளை நடக்கிறது

ByA.Tamilselvan

Nov 18, 2022

குரூப்-1 தேர்வு நாளை தமிழகம் முழவதும் நடைபெறுகிறது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தவகையில் முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த மாதம் (அக்டோபர்) 30-ந்தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. இந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடக்கிறது. சென்னை உள்பட 38 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.