• Sun. Apr 28th, 2024

காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக 12 மணி நேரத்தில் – இந்திய வானிலை ஆய்வு மையம்…

Byதரணி

Dec 3, 2023

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் – இந்திய வானிலை ஆய்வு மையம்.

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

டிச-4 ஆம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதையொட்டிய வட தமிழக பகுதிகளை புயல் நெருங்கும்.

டிச-5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூர் – மசூலிப்பட்டிணம் இடையே புயல் கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *