• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கனிம வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Byvignesh.P

Jun 2, 2022

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பாக கனிம வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனி மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ஒருகோடி வழங்க வேண்டும் என்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் ,தேனி மாவட்டத்தில்கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .மாநில துணை அமைப்பு செயலாளர் பாலசுந்தரராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பழ.நாகேந்திரன் தேனி மாவட்ட துணை செயலாளர்கள் வேல்மணி ,அய்யனார் ,கலைச்செல்வம், பாலமுருகன், செல்வகுமார் மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் புதிய தமிழகம் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்