• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் – தள்ளுமுள்ளால் சட்டை கிழிப்பு…

Byகிஷோர்

Oct 15, 2021

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்க்கு மோடி அரசை கண்டித்தும் மத்திய உள்துறை அமைச்சரை கைது செய்யக் கோரியும், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பாக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையும் உருவ பொம்மைகளை செய்து எரிக்க முற்பட்டனர். அதை தடுப்பதற்காக போலீசார் கூட்டத்தில் புகுந்து தடுக்க முற்பட்டபோது பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் அவர்களுடைய மகன் ஒன்றிய கவுன்சிலர் பகத்சிங் அவர்களுடைய சட்டையை கிழித்தனர்.

ஒருவழியாக காவல்துறையினர் வன்முறையை அதிகம் ஏற்படாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.