• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து.. தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

Byவிஷா

Oct 13, 2022

மத்திய அரசின் இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும்இ நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்..இ
இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில்இ ஒரே நாடுஇ ஒரே மொழிஇ ஒரே மதம்இ ஒரே உணர்வுஇ ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் கருத்தியலை மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முற்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் (11வது தொகுதி)இ மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி.இ ஐ.ஐ.எம்.இ எய்ம்ஸ் மற்றும் ஒன்றிய பல்கலைக் கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது இந்திப் பேசாத மாநிலங்களின் உணர்வுகளுக்கு எதிரானது.
மேலும்இ மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டுஇ இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது. இது இந்தியைப் படித்தால் மட்டுமே வேலை என்கிற நிலையை உருவாக்கிஇ இந்திப் பேசாத மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மறைமுகச் சதித் திட்டமாகக் காட்சியளிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டு வரும் செயலின் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளதை கடுமையாக எதிர்ப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வரும் மத்திய அரசின் முடிவை திரும்பபெற வலியுறுத்திஇ வருகின்ற 15-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.