• Tue. Apr 30th, 2024

பட்டியலின பணிப்பெண்ணை கொடுமை படுத்திய வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ByG.Suresh

Feb 1, 2024

அஇஅதிமுக சார்பில் திமுக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் மருமகள் தங்களது வீட்டில் பணிபுரிந்த பட்டியலின பணிப்பெண்ணை கொடுமை படுத்திய வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் எம் எல் ஏ கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோரது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் ஏழ்மையான பட்டியலின பெண்ணை நீட் தேர்விற்கு படிக்க வைப்பதாக பொய்யான வாக்குறுதி அளித்து வீட்டிற்கு வந்த பிறகு அப் பெண்ணை சித்ரவதை செய்து சிகரெட்டால் சூடு வைத்து வன்கொடுமை செய்துள்ளனர். எடப்பாடியார் போராட்டம் அறிவித்ததால் தான் கைது செய்யப்பட்டு உள்ளனர். இல்லையென்றால் இந்த விஷயத்தை மூடி மறைத்து இருப்பார்கள் என்றும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களை தரம் தாழ்ந்து பேசிய ஆண்டி முத்து ராஜா புரட்சி தலைவர் போட்ட சத்துணவுத் திட்டத்தின் கீழ் உணவு சாப்பிட்டு சட்டக் கல்லூரியில் படித்ததை மறந்து பேசுகிறார். ஆண்டி முத்து ராஜா வின் தலைவர் கருணாநிதியின் கடனை அடைக்க தன்சொந்த செலவில் திரைப்படம் எடுத்து கொடுத்தவர் முரசொலி மாறனின் கல்விக்கு செலவழித்தவர் துரைமுருகனை படிக்க வைத்தவர் .தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிப்பதே திமுக வின் நிர்வாகிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுமே செய்து வருவதால் தன்னுடைய நிம்மதி போய்விட்டது என்று ஸ்டாலின் கூட்டங்களில் பேசி வருகிறார். இந்த நிலையில் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளது .தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரண காலத்தில் தொகுதவ மக்கள் பற்றி கவலைப்படாமல் சீட்டாட்டம் விளையாடிக் கொண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்திருக்கிறார். அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் பாதுகாவலராக உள்ள அஇஅதிமுக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளைக் கைப்பற்றி திமுக விற்கு பதிலடி கொடுத்து பாடம் கற்பிக்க வேண்டும் என்று பேசினார். இக்கூட்டத்தில் நகரச் செயலாளர் ராஜா, அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், கற்பகம் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, சேவியர், மற்றும் இளைஞர் அணி பாசறை பிரபு உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *