மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் ஏ ஐ டி யு சி கொடியேற்று விழா கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 2023 -24 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் தாமதமின்றி வழங்கிய கோரியும், 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக வழங்க கோரியும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உடனடியாக வழங்க கோரியும், காலி பணியிடங்களை வாரிசு பணி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க கோரியும் உள்ளிட்ட 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சங்க துணை தலைவர் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏஐ டி யு சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

