• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தமிழர் தேசிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Byp Kumar

Feb 21, 2023

வடமாநிலத்தவர்கள் வருகையை கட்டுப்படுத்த வேண்டும், தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் தேசிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
உலக தாய்மொழி தினத்தையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் தமிழர் தேசிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்குதமிழர் தேசிய கழக நிறுவனர் வையவன் தலைமையிலும்சிறப்பு அழைப்பாளர்களாக மருது சேனை நிறுவனர் ஆதிநாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் வரம்பு மீறி வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் வருகைதரும் வடமாநிலத்தவர்களை கட்டுப்படுத்த வேண்டும், வடமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது, வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் அதிகளவில் நிலம் வாங்க தடை விதிக்க வேண்டும், தமிழ்நாட்டின் தொழில் வணிக வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிக்காலம் முடிந்ததும் அவர்கள் மாநிலங்களுக்குத் திரும்பும்படியான அனுமதி முறையை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.