• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜாக்டோ ஜியோ வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ByA.Tamilselvan

Dec 27, 2022

வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தது. அதைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், காந்திராஜன், ஆ.செல்வம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசு துறைகளில் அரசாணை 115, 139, 152-ஐ ரத்து செய்ய வேண்டும். அதேபோல், இளைஞர்களின் வேலைவாய்ப்பை கேள்விக்குறியாக்கும் ’அவுட்சோர்சிங்’ முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜன.5-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்றனர்.