• Thu. Apr 18th, 2024

முகக்கவசம் அணியும் பழக்கம் குறைவு: ஐசிஎம்ஆர் ஆய்வு

Byகாயத்ரி

Nov 27, 2021

வணிக வளாகங்களுக்கு வரும் மக்களில் 57 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்து வருகின்றனர். மேலும் சென்னையில் வசிக்கும் மக்களிடம் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்துள்ளது என்று ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியதையடுத்து சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சானிடைசர் போட்டு கழுவுததல் போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. அதன்படி ஆரம்பத்தில் மக்கள் முறையாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வந்தனர்.பின்னர் தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியதைடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, சானிடைசர் கொண்டு கைகளை கழுவுதல் போன்ற பழக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரத்தின் இறுதி நாட்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் 75 இடங்களில் 6,130 தனி நபர்களிடம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஒரு சர்வே நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தெருக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், குடிசை பகுதிகள் அருகில் உள்ள வெளிப்புற பொது இடங்களில் 32 சதவீதம் பேர் சரியாக முகக்கவசம் அணிகின்றனர் மற்ற வெளிபுறப் பொது இடங்களில் 35 சதவீதம் பேர் சரியாக முகக்கவசம் அணிகின்றனனர்.மளிகை கடைகள், மருந்துக்கடைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்ற உட்புற பொது இடங்களில் 14 சதவீதம் பேரும், மற்ற இடங்களில் 21 சதவீதம் பேருக்கு முகக்கவசம் அணிகின்றனர். மேலும் வணிக வளாகங்களுக்கு வரும் மக்களில் 57 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்து வருகின்றனர். மற்றவர்கள் அணிவதில்லை.

மேலும் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டதும் முகக்கவசம் அணியும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக தென்பட்டாலும் காலப்போக்கில் முக்கவசம் அணியும் பழக்கம் குறைந்து விட்டது. சென்னையில் 54.29 சதவீதம் பேர் மட்டுமே 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *