• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி

ByKalamegam Viswanathan

May 12, 2025

மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் பயிற்சி குடில் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றிப் பயணம் இணைந்து நடத்திய மாபெரும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்து,பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அனைவரையும் வரவேற்று இ.வெ.ப மாணவரணி ஒருங்கிணைப்பாளர் ச.சந்தோஷ் வரவேற்புரை வழங்கினார். மாணாக்கர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

இதில் முதல் பரிசு 5000 ரூபாய் தொகை கேடயம் சான்றிதழ் மெடலை மாணவி யாழினி தங்கப்பாண்டி இரண்டாம் பரிசு 3000 ரூபாய் கேடயம் சான்றிதழ் மெடலை மாணவி மகா பரணி,மூன்றாம் பரிசு 2000 ரூபாய் கேடயம் சான்றிதழ் மெடலை மாணவி சண்முக ஹரி தாரணி ஆகியோர் பெற்றார்கள். சிறப்புப்பரிசு 500 ரூபாய் கேடயம் சான்றிதழ் மெடலை மாணவி பெ.துர்கா,சிறப்புப்பரிசு 500 ரூபாய் கேடயம் சான்றிதழ் மெடலை மாணவர் கு.ச.சாரதி, சிறப்புப்பரிசு 500 ரூபாய் கேடயம் சான்றிதழ் மெடலை மாணவி சந்தோஷிகா,சிறப்புப்பரிசு 500 ரூபாய் கேடயம் சான்றிதழ் மெடலை மாணவி கவிபாரதி ஆகியோர் பெற்றார்கள்.

பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணாக்கர்கள் அனைவருக்கும் மெடல்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பாரதிதாசன் பயிற்சி குடில் அகாடமி தாளாளர் சி.ஜீவா மற்றும் இ.வெ.ப நிறுவனரும் பாரதிதாசன் பயிற்சி குடில் அகாடமி செயலாளர் சி. சூர்யா நோக்கவுரை வழங்கினார்கள்.

சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ்நாட்டு கல்வி இயக்கம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் செ.கர்ணன்,நாம் தமிழர் கட்சியின் மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சிவராமன்,தமிழாசிரியர் முனைவர் சேவுகமூர்த்தி,மரபு வேளாண்மை உழவர் கிருங்கை திருமாறன் ஆகியோர் மாணாக்கர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். பெற்றோர்கள் பங்கேற்றார்கள். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் கல்லானை சுந்தரம் நன்றியுரை வழங்கினார்.