புதுக்கோட்டை மாவட்டம் ராஜா குளத்தூர் வடசேரிப்பட்டி திருவாதிப்பட்டி நரங்கன்பட்டி மற்றும் ரத்னா குறிச்சி ஆகிய பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர்.

அப்பொழுது செம்பட்டுர் பகுதியில் பிரபல தொழில் அதிபர் சண்முக பாண்டியன் என்பவர் அப்பகுதியில் கல்குவாரி துவக்க அனுமதி விண்ணப்பம் அளித்து இருப்பதாகவும், இதேபோன்று கிரஷர் தொழில் செய்வதற்க்கும் முயற்சித்து வருவதாகவும் அதற்கு தடையாக உள்ள கிராம மக்களை சண்முக பாண்டியன் என் ஆட்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் தினந்தோறும் ரௌடிகளை வைத்து தொலைபேசி வாயிலாக கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் பொதுமக்கள் அச்சத்தோடு தெரிவித்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் பள்ளிக்கூடம் வழிபாட்டு ஸ்தலம் விளையாட்டு மைதானம் மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள இடங்கள் ஏராளமாக இருப்பதாகவும் ஏராளமான மக்களும் வசித்து வருவதாகவும் எனவே ஊருக்கு நடு பகுதியில் திறக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன் தற்கொலை செய்யும் நோக்கம் ஏற்பட்டு இருப்பதாக பரபரப்பாக தெரிவித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குவாரி அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.