• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இரண்டாம் எலிசபெத் மறைவு… கோஹினூர் வைரம் யாருக்கு ..???

Byகாயத்ரி

Sep 9, 2022

இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் அரிய பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரம் 1850ல் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. அரிய வகை வைரமான இது ஆண் அரசர்களுக்கு கெடுதல்களை விளைவிக்கும் சக்தி கொண்டது என நம்பப்பட்டதால் பெண்ணரசிகள் அணியும்படி மகாராணியின் கிரீடத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டது.