• Mon. Mar 17th, 2025

இராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினர்க்கு மன அழுத்தத்தைப் போக்கும் புத்தாக்க பயிற்சி

ByKalamegam Viswanathan

Jan 29, 2024

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் (பி ஏ சி ஆர்) நூற்றாண்டு மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு (MSK Programme – Mind Set Knowledge ) மனஅழுத்தத்தைப் போக்கும் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு P.A.S அழகர் ராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விருதுநகர் மாவட்ட துணை வட்டார தளபதி திருமதி டாக்டர். எம்.அருள் செல்வி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். விழாவிற்கு மதுரை சரக துணை தளபதி ACG திரு.P.J.ராம்குமார் ராஜா அவர்கள் தலைமை வகித்தார்கள். மேலும் விழாவில் சிறப்பு விருந்தினராக (துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை )நேர் துணை அதிகாரி ஊர்க்காவல் படை திரு பழனிக்குமார் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக கோயம்புத்தூரில் இருந்து வந்த டாக்டர் .மொகைதீன் மற்றும் டாக்டர் ப்ரியா ஆகியோர்கள் கலந்து கொண்டு ஊர்காவல் படையினருக்கு பணியிலும் வாழ்விலும் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவது சம்பந்தமான வழிமுறைகள் பயிற்சிகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி . இதில் தொலைக்காட்சி மூலம் ஏற்படும் தீமைகள் மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நாடகங்கள் நடத்தப்பட்டன நாடகத்தை ஊர்க்காவல் படையினர் நடித்து காண்பித்தனர் .

இதில் 150 ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஊர் காவல் படை சார்பு ஆய்வாளர் திரு த.தேவதாஸ் மற்றும் எழுத்தர் இரா.சிவராமன் ஆகியோர்கள் செய்திருந்தனர்.