மது போதையில் கள்ளழகரை தூக்கும் தின கூலி சீர்பாத ஊழியர்கள் – கண்டு கொள்ளாத அழகர் கோவில் நிர்வாகம், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேதனை,
ஆண்டு தோறும் சித்திரை மாதம் மதுரையில் சித்திரை திருவிழா நடைப்பெறும், இதில் அழகர்கோவிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு வைகை ஆற்றில் இறங்குவது, தீர்த்தவாரி, மண்டூக முனிவர்க்கு சாப விமோசனம் வழங்குவது, தசஅவதாரம், பூப்பல்லாக்கு போன்ற நிகழ்வுகள் நடைப்பெறும், இதில் கள்ளழகரை சீர்பாத ஊழியர்கள் தான் தூக்குவார்கள், இவர்களை கோவில் நிர்வாகம் தான் பணி அமர்த்தும், அப்படி இருக்க இதில் ஒரு சில தின கூலி சீர்பாத ஊழியர்கள் மது போதையில் கள்ளழகரை தூக்குவதும், ஒயின்ஸ் சாப் முன்பே நின்று சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்களிடமே சீர்பாத ஊழியர்கள் என்று கூறி பணம் வாங்கி சரக்கு அடிப்பதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேதனையை தெரிவிக்கின்றனர்,
இவர்களை கோவில் நிர்வாகம் கண்டுகொள்வதும் இல்லை, இவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுப்பதும் இல்லை, என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர், இவர்களை போல் மது போதையில் கள்ளழகரை தூக்குவோர் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி வரும் காலங்களில் இது போன்ற தவறு நடைப்பெறாமல் கோவில் நிர்வாகம் பாத்துக் கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது,..