• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மகளை கத்தியால் குத்தி கொலை – தந்தை, அண்ணன் கைது..,

ByKalamegam Viswanathan

Dec 24, 2025

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே உள்ள சிந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் பாலமுருகன், மகள்கள் ஐஸ்வர்யா, பிரியங்கா(24). இதில் பிரியங்கா, நர்சிங் முடித்து விட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில், மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்தத்தின் போது, தனது திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், வேறு ஒருவரை காதலிப்பதாகவும் கூறி விட்டு கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், வீட்டிற்கு செல்ல விரும்பம் இல்லை என பிரியங்கா கூறியதால் அவரை, விருதுநகரில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இதனை தொடர்ந்து காப்பகத்திற்கு சென்ற பிரியங்காவின் தந்தை ரமேஷ், அண்ணன் பாலமுருகன் ஆகியோர் பிரியங்காவிடம் சமாதானம் பேசி உள்ளனர்.

இதனை நம்பிய பிரியங்கா குடும்பத்தினருடன் செல்ல முடிவு செய்தார். அதன்படி அவர்கள் 3 பேரும் காரில் புறப்பட்டு மதுரை வில்லாபுரம் MMC காலனிஅருகேயுள்ள ஜவகர்புரத்தில் உள்ள ரமேஷின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்தனர்.

ஐஸ்வர்யாவும் அவருடைய கணவருமான இருளாண்டி ஆகியோர் வீட்டிற்குள் அனுப்பி வைத்து விட்டு வெளியே நின்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது, வீட்டிற்குள் சென்ற ரமேஷ், பாலமுருகன் ஆகியோர், பிரியங்காவை தனி அறையில் வைத்து பூட்டி, நாங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடியாதா, குடும்பத்தை அசிங்கப்படுத்திய நீ உயிருடன் இருக்கக் கூடாது என கூறி அவரை கத்தியால் உடலில் பல இடங்களில் சராமாறியாக குத்தி உள்ளனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு இருளாண்டி உள்ளிட்டோர் அங்கு வந்தார். அதற்குள் ரமேஷ், பாலமுருகன் அங்கிருந்து தப்பி விட்டனர்., இதில் பலத்த காயம் அடைந்த பிரியங்காவை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிகிச்சை பலனின்றி பிரியங்கா மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இருளாண்டி அளித்த புகாரின் பேரில், அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவின் தந்தை ரமேஷ் மற்றும் அவரது அண்ணன் பாலமுருகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சிகிச்சையில் இருந்த பிரியங்கா சிகிச்சை பலனளிக்காமல் இறந்து உள்ளார் அதனைத் தொடர்ந்து கொலை முயற்சி கொலை முயற்சி கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு ள்ளது.