• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காவலர் தினத்தை முன்னிட்டு தண்டால் எடுக்கும் போட்டி.,

ByAnandakumar

Sep 6, 2025

கரூரில் காவலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற (Push up) போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா கலந்து கொண்டு தண்டால் (Push up) எடுத்தார்.

செப்டம்பர் 6 காவலர் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தண்டால் (Push up) எடுக்கும் போட்டி நடைபெற்றது. குறைந்தது 25 தண்டால் எடுக்க வேண்டும் என நிர்ணயம் செய்து நடத்தப்பட்ட இப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா கலந்து கொண்டு தண்டால் எடுத்தார்.

முதல் மூன்று இடங்கள் பிடித்த சசிகுமார், சதீஷ்குமார், நிரஞ்சன் ஆகியோர் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசு வழங்க உள்ளனர்.

இதில் பங்கேற்ற அனைவரையும், காவல் அதிகாரிகள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இதனை தொடர்ந்து நீத்தார் நினைவுதூணிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.