காரியாபட்டியில் தலித் கிறிஸ்துவர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். 1950 ஆம் ஆண்டு ஆக.10 ந் தே தி குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இந்துக்கள் அல்லாத பிற தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள் என்று உத்தரவு பிறப்பித்தார். ஆக.10 ந் தே தி தலித் கிறிஸ்தவர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தியும் தலித் கிறிஸ்துவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காரியாபட்டி அமலா அன்னை ஆலயத்தில் ஆலயத்தில் தலித் கிறிஸ்தவர்கள் கருப்பு கொடி யேற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்குத்தந்தை ஜோசப் அமலன், வழக்கறிஞர் ஆசிர்வாதம், அன்பின் தலைவர் சூசைராஜ் மற்றும் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
