• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சியான் 61 படத்தின் படபிடிப்பு துவக்கம்

ByA.Tamilselvan

Oct 17, 2022

பொன்னியின் செல்வனை அடுத்து விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத சியான் 61 படத்தின் படபிடிப்பு துவங்கியுள்ளது.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்த வரலாற்று நாடகமான பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக வந்து ரசிகர்களை மனதில் குடி கொண்டவர் விக்ரம். இவரின் முந்தைய படமான கோப்ரா படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை. நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகிய தோல்வியை சந்தித்தது.ஆனால் அதற்கும் சேர்த்து விக்ரமிற்கு புகழைத் தேடிக் கொடுத்தது பொன்னியின் செல்வன். தற்போது விக்ரமின் 61வது படம் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது. சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவின் கடப்பாவில் இன்று துவங்கியுள்ளது.

இந்தபடத்தை பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்க உள்ளார். முன்னதாக ராஷ்மிகா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்ட நிலையி தற்போது மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனிடம் தயாரிப்பாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என தகவல் பரவி வருகிறது.