• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செப்.1 முதல் சுங்க கட்டணம் அதிகரிப்பு..!

Byவிஷா

Aug 26, 2022

தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 1 முதல் 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் அதிகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1 ம் தேதி முதல் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
இதனையடுத்து கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரை அதிகரிக்கவுள்ளது.செப்டம்பர் 1ம் தேதி முதல் திருச்சி சமயபுரம் சுங்கசாவடி, திருப்பராய்த்துறை, மேலும் பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம் சுங்க சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், வீரசோழபுரம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம் விஜய மங்கலம், விழுப்புரம் விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி உட்பட 28 சுங்க சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.