• Thu. May 2nd, 2024

செப்.10ம் தேதி முதல் பி.இ பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்..,

ByA.Tamilselvan

Aug 27, 2022

தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தகாய்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் செப். 7-ம் தேதி வெளியிடப்படும் நிலையில், புதிய கலந்தாய்வுக்கான அட்டவணையை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதன்படி, பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்காய்வு 4 கட்டங்களாக அக்டோபர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 10- 12ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு, செப்டம்பர் 25- 27 வரை இரண்டாம் கட்டமாகவும், அக்டோபர் 13- 15ம் தேதி வரை மூன்றாம் கட்டமாகவும், அக்டோபர் 29- 31ம் தேதி வரை 4ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *