• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வாடிக்கையாளர்களே உஷார்..! இந்திய தபால் துறை எச்சரிக்கை

ByA.Tamilselvan

May 6, 2022

பல வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் ரிஸ்க் எடுக்கலாம் எடுக்காமலேயே நல்ல லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும். ரிஸ்க் எடுக்காமலேயே தங்களுடைய பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் போஸ்ட் ஆபீஸ் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் வெறும் சேமிப்பு மட்டுமல்லாமல் வட்டி வருமான வரிச் சலுகை என பல சலுகைகள் வழங்கப்படுகிறது .

அதே நேரம் இந்த வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை சேர்த்து வைப்பதில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது. சிறிய தொகையை கஷ்டப்பட்டு சேமித்து வரும் முதலீட்டாளர்கள் அவர்களை பணத்தை பாதுகாப்பது மிக மிக அவசியம். அந்த வகையில் இந்திய தபால்துறை வாடிக்கையாளர்களை ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்துள்ளது. அதன்படி சமீபகாலமாகவே ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இந்திய தபால் துறை சார்பில் சில சர்வே, வினாடி-வினா போட்டி நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அரசு மானியங்களை வழங்கி வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. இது உண்மை அல்ல இதை நம்ப வேண்டாம் என்று இந்திய தபால் துறை எச்சரித்துள்ளது. அதேபோல தெரியாத நபர்களிடம் பிறந்த தேதி, அக்கவுண்ட் நம்பர், ஒடிபி போன்ற விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.